மொனராகலை, வெல்லவாய பகுதியில் நேற்று (03) காலை ஏற்பட்ட வீதி விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அறநெறி பாடசாலை சென்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மஹஆரகம சிரிபுர பிரதேசத்தை சேர்ந்த, 9ஆம் தரத்தில் கல்வி பயின்ற சதிலி நிபுணிகா என்ற 14 மாணவியே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெஹெரயாய கங்காராம விகாரையில் அமைந்துள்ள அறநெறி பாடசாலைக்குத் தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே, எதிரே வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவியும் அவரது சகோதரரும் ஹந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவி உயிரிழந்துள்ளார்.
பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் மரணம் தொடர்பான மரண பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி பலி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space