உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலத்தை மாத்திரம் நீட்டிக்கும் தீர்மானத்தை திருத்தம் செய்து, சகல நீதிபதிகளின் பதவி காலத்தையும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நீதிச்சேவையில் நீதிபதி பதவியில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் வழக்கு விசாரணைகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதாயின் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டு வர வேண்டும்.கீழ் நிலை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி காலத்தை சட்டத்திருத்தம் ஊடாக நீட்டிக்க முடியும்.
நீதியரசர்களின் பதவி காலத்தை மாத்திரம் நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு நீதிபதிகள் சேவை சங்கம் நேற்று முன்தினம் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளது.
கடுவலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நீதிவான் சேவை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் அரசாங்கத்தின் குறித்த யோசனை தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பு ஊடாக தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற 65 உறுப்பினர்களும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சகல நீதிபதிகளினதும் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு அரசாங்கம் அவதானம் !
Ad Space
Ad Space
Ad Space
Ad Space