மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் மற்றும் தீவிரமடைந்துவரும் உறுதியற்ற நிலைமையால் உருவாகியுள்ள உலகளாவிய நெருக்கடியினை கருத்திற்கொண்டு இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினார் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழாவினை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தவிர்க்க முடியாத சூழலினால் எடுக்கப்பட்டுள்ள இத்தீர்மானம் குறித்து வாசகர்களுக்கு தெளிவுபடுத்துமாறு இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் குலதுங்க மற்றும் பொதுச் செயலாளர் லசித உமகி லிய ஆகியோர் ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பொது மக்களை தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றை இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் அண்மையில் வெளியிட்டது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இந்த விழாவினை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது
தற்போது ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் மாற்றங்களால் போக்குவரத்து மற்றும் வழங்கல் சங்கிலி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையினை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனுசரணையாளர்கள் கண்காட்சியாளர்கள் ஊடக பங்காளிகள் அதிதிகள் மற்றும் வாசகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பாதுகாப்பு மற்றும் நிதி நிலைத்தன்மை மற்றும் நலன்புரி விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடபட்டுள்ளது.
கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா காலவரையறை இன்றி ஒத்திவைப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space