கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்களை வசூலிக்கும் நடவடிக்கை நாளை திங்கட்கிழமை (23) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை காலை 6.00 மணி முதல் இந்த கட்டண வசூலிப்பு நடைமுறைக்கு வரும் என கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீண்ட வரிசைகள் காரணமாக கடந்த 18ஆம் திகதி முதல் தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர் குறியீடு மற்றும் வாகன இலக்கத் தகடு அடிப்படையிலான முறையினால் வீதிகளில் நெரிசல் குறைவடைந்துள்ளது.
எனவே, இதனைத் தொடர்ந்து, மாநகர சபையின் நிதி நிலைக்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய, வழமையான வாகன தரிப்பிடக் கட்டண முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டண வசூலிப்பு நாளை முதல் மீண்டும் ஆரம்பம்: மாநகர சபை அறிவிப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space