இலங்கையின் தேசிய திரிபோஷா ஊட்டச்சத்து திட்டத்தை வலுப்படுத்துவதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஜனவரி29 ஆம் திகதி அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், சோள இறக்குமதியை குறைத்து திரிபோஷ உற்பத்தியை மேம்படுத்தல் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அனுராதபுரம், மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7,500 சோள உற்பத்தியாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவர் என நம்பப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஊடாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து மூலம் கிராமப்புறங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் முடியும்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space