இன்று (05) புதன்கிழமை காலை கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, வினாடிக்கு 130 கன அடி நீர் மகாவலி கங்கைக்கு திறந்து விடப்படவுள்ளதாக கொத்மலை நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரியான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், உலப்பனை, கெலிஓயா, கம்பளை, பேராதனை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளில் மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன – நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space