ஓட்டமாவடி பிரதேசத்திலே உள்ள காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை ஒன்றை கட்டினேன் என நாடாளுமன்றம் உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தார்.
இதுவரையில் தான் இவ்வாறு பேசியமைக்காக மன்னிப்போ அல்லது அவ்வாறு பேசியமைக்கான காரணத்தையோ அவர் தெளிவுபடுத்தவில்லை.
இதனைத்தொடர்ந்து இவர் அரசியலில் இருந்த காலங்களில் நீதிமன்ற அவமதிப்பு செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவருடைய இந்த சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையா?
காலம் கடந்ததென்று கூறினாலும் அவர் இவ்வாறு பேசியமைக்கு ஆதாரமான காணொளிகள் காணப்படுகின்றன. நீதிபதிகளுக்கு எதிராக செயற்பட்டு வரும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும்.
கைது செய்யப்படுவாரா ஹிஸ்புல்லாஹ்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space