கேகாலை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து சிறிலங்கா காவல் துறை தெளிவுபடுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவல்படி, இந்தச் சம்பவம் 2025 பெப்ரவரி 21 அன்று கேகாலையிலுள்ள பிடிஹும சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, கேகாலை பிரதான பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கேகாலையில் மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் சிறிலங்கா காவல் துறை விளக்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space