கெக்கிராவ அரச விடுதியொன்றின் சமையலறையில் இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக விடுதியின் சமையலறை கூரைப் பகுதிக்கும், அங்கிருந்த சமையல் உபகரணங்கள் மற்றும் ஏனைய தளபாடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கெக்கிராவ அரச விடுதியில் வெடிப்புச் சம்பவம் : ஒருவர் காயம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space