இரத்தினபுரி - பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேஅதுர பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வேஅதுர, பனாமுர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் அதே பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இருவருடன் ஏற்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர், பனாமுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பனாமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space