பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த நான்கு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (14) வியாழக்கிழமை 12.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தேயிலை மழையில் குறித்த தோட்ட தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த போதே தேயிலை மரத்தில் அடியில் இருந்த குளவி கூடு கலைந்து வந்துதாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சிச்சை பெற்று வருவதாகவும் இவர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லையென வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குளவிகொட்டுக்கு இலக்காகிய நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space