கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த கலந்துரையாடல்!
Ad Space
Ad Space
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகளுடனான விசேட வலையமைப்பு இரவு விருந்து மற்றும் கலந்துரையாடல் மட்டக்களப்பு பாசிக்குடா அனந்தயா ரிசோர்ட் அன்ட் ஸ்பா ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (18) இரவு நடைபெற்றது.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகள் அமைச்சருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இதன்போது கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி, இயற்கை வளங்கள், கலாசாரப் பாரம்பரியம், சுற்றுலா வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.மேலும், கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான இயற்கை மற்றும் கலாசார வளங்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலப்படுத்துதல், சுற்றுலாத்துறையில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச வலையமைப்புகளைப் பயன்படுத்தி பிராந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.கிழக்கு மாகாணத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரப் பன்முகத்தன்மையையும் எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பு கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.
Ad Space
Ad Space