கிழக்கு கொங்கோவின் ரூபாயா பகுதியில் உள்ள கோல்டான் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 200 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொங்கோவின் ரூபாயா பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லுவோவோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகலில் பெய்த கடும் மழையையடுத்து சுரங்கப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கியுள்ளனர்.
மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். 21 மணிநேரத்திற்குப் பிறகு மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு ; 200 பேர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space