திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாக தமிழகத்துக்கு விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக எதிர்க்கட்சிகள் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதுபோல சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.
முதல்வர் விஜய், நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் காவிரி, மேகேதாட்டு அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்த கருத்தும் கூறவில்லை.
தமிழக அரசியல் கட்சிகள் குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்தையும், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை எனும் அவரது
நிலைப்பாட்டையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனரா என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உடனே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்.
காவிரி பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும், ஆலோசனை கூறவும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சினையில் அரசுக்கு ஆதரவு அளிக்க அனைத்து கட்சிகளும் தயார்: முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space