காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரியும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தியும் சம உரிமை இயக்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி செவ்வாய்க்கிழமை (02.06.2026) பிற்பகல்-02.30 மணியளவில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகில் ஆரம்பமானது.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி காங்கேசன்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்தியை அடைந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை அடைந்து அங்கிருந்து யாழ்.தந்தை செல்வாவின் கலையரங்கத்தைச் சென்றடைந்தது. தொடர்ந்து அங்கு முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்ததா? எனும் தலைப்பிலான கருத்தரங்கும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space