பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரான்சில் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டிருந்தபோது, தீயின் நடுவே வெடிச்சத்தம் கேட்டதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்
தென்மேற்கு பிரான்சிலுள்ள Le Porge என்னும் கிராமத்தில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கும்போது வெடிச்சத்தம் கேட்டதாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், காட்டுத்தீக்குப் பின் வீடு திரும்பிய மக்கள், தீ எரிந்த இடத்தில் வெடிகுண்டுகள் கிடப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.உடனடியாக, மக்கள் அப்பகுதிக்கு வரமுடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்திய உள்ளூர் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்துள்ளார்கள்.
வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, 400க்கும் மேற்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், இரண்டாம் உலகப்போருக்குப் பின் நாங்கள் எதிர்கொள்ளும் மிக பயங்கரமான விடயம் இந்த காட்டுத்தீதான் என கூறியிருந்த நிலையில், இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயமும் நிகழ்ந்துள்ளது கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space