அனுராதபுரத்தில் நீரில் நிறைந்திருந்த கழிவறை குழிக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மரதன்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அகார் முகமது என்ற 06 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டுமானப் பகுதிக்கு அருகில் சகோதரர்களுடன் புறாக்களைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த திறந்த நிலையில் காணப்பட்ட மலக்கழிவறை குழிக்குள் சிறுவன் விழுந்துள்ளார்.
சிறுவன் குழிக்குள் விழுந்ததைக் கண்ட சகோதரர்கள் மற்றும் அயலவர்கள் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கழிவறை குழிக்குள் விழுந்த சிறுவன் பலி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space