மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட தபாலகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் சனிக்கிழமை (25) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த களுவாஞ்சிக்குடி தபாலகம் இதுவரை காலமும் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்திருந்தது.
இத்தபாலகத்திற்குரிய நிலப்பரப்பு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்திருந்த நிலையில் அது அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு தற்போது 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக தபாலகம் அமைக்கப்பட்டு அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடந்த சனிக்கிழமை (18) அன்று இந்த புதிய தபாலக காரியாலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிகுடியில் ரூ.29.5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகம் திறப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space