கதிர்காமத்தில் இருந்து செல்லக்கதிர்காமம் நோக்கிச் சென்ற சபாரி ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம்(22.03.2026) கதிர்காமம் மகசேன் வட்டார வீதி சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சபாரி ரக வாகனம் வீதிச் சந்தியைக் கடக்க முயன்றபோது, சாரதியின் வலது புறமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் கே.ஏ.சந்தன (வயது 54) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இராணுவத்தில் 28 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்றவர் என்பதுடன், முதலில் தரகம காமினிபுர பிரதேசத்தில் வசித்து வந்தவர் என்றும், தற்போது பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்து வந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கதிர்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கதிர்காமத்தில் விபத்து - இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space