கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீனடியன பகுதியில் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒரு சந்தேக நபரும் மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் உபகரணங்களுடன் மற்றோரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது , சட்டவிரோத 135 லீட்டர் மதுபானமும் 337.5 லீட்டர் மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 4158 லீட்டர் கோடா மற்றும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 மற்றும் 53 வயதுடைய மினுவாங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்கவில் சட்டவிரோத மதுபானம் மற்றும் உற்பத்தி உபகரணங்கள் கைப்பற்றல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space