மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று புதன்கிழமை (22) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் கடும் மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களை குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space