இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான கடல்சார் தொழில்முறை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆழ்கடல் சுழியோடிப்யிற்சிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா - இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான 2026 ம் ஆண்டிற்கான நான்காவது சுழியோடிப் பயிற்சிகள் தற்போது கொழும்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த இப்பயிற்சிகள் கொழும்பு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்றுவருகின்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆழ்கடல் சுழியோடிப்யிற்சிகள் மற்றும் கலப்பு எரிவாயு சுழியோடிப்யிற்சிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான இந்தத் தொழில்நுட்பப் பகிர்வு, கடல்சார் மீட்புப் பணிகளில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
கடல்சார் மீட்புப் பணிகளில் புதிய மைல்கல்: ஆழ்கடலில் நவீன சுழியோடிப் பயிற்சிகள் ஆரம்பம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space