எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யால சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பயிரிடப்பட்டிருந்த இரண்டு பாரிய கஞ்சா தோட்டங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று புதன்கிழமை (08) முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 03 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த ஒரு இலட்சத்து அறுபதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகளில் இருந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்னர், ஏனைய அனைத்து செடிகளும் அவ்விடத்திலேயே தீயிட்டு அழிக்கப்பட்டன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக எதிமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: 1,60,000 செடிகள் தீயிட்டு அழிப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space