கச்சத்தீவு திருவிழாவின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதவான், அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்ததுடன், 24ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளார்.
கச்சத்தீவு பெருவிழா இவ்வருடம் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இதன் போது, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகத்தில், தேநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டமை, உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முரணான வகையில் பழங்கள் விற்பனை செய்தமை, உணவு கையாள்பவர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உரிமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததுடன் , 24ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது
கச்சத்தீவு திருவிழா: சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு சிறைத்தண்டனை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space