வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் உள்ள புத்தல, உனவட்டுன பகுதியில், முச்சக்கரவண்டியொன்று வேன் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டியே வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே இவர்கள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் முச்சக்கரவண்டி ஓட்டிச் சென்ற நபர், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் விபத்தில் காயமடைந்து, புத்தல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உயிரிழந்த நபர் அம்பாறையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் புத்தல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்தில் சிக்கியது - ஒருவர் பலி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space