கிரிபத்கொடையில் இன்று சனிக்கிழமை (04) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் உபாலி பன்னிலகே இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
இலங்கையின் சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, சுதந்திரத்திற்குப் பின்னரான அனைத்து அரசாங்கங்களும் இலவச சுகாதார சேவையை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. ஒருவரின் பணப்பையிலுள்ள பணத்தை தீர்மானிக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில், மருத்துவ பீட மாணவர் ஒருவர் ஐந்து வருடங்களின் பின் வைத்தியராக வெளியேறுவதற்கு அரசாங்கம் மிக அதிக தொகையைச் செலவிடுகிறது. ஒரு பொறியியலாளரை உருவாக்க 30 இலட்சம் ரூபாய் செலவிடப்படும் நிலையில், ஒரு வைத்தியரை உருவாக்க மக்கள் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இது பொறியியலாளருக்கான செலவை விட இரு மடங்காகும்," என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் 35,000 முதல் 38,000 வரையான வைத்தியர்கள் உள்ளதாகவும், அவர்களில் சுமார் 25,000 முதல் 28,000 வரையிலானோர் அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்ட அவர், சமூகத்தில் அவர்கள் கொண்டுள்ள விசேட பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஒரு வைத்தியரை உருவாக்க 60 இலட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space