சந்தையில் விற்பனை செய்யப்படும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சுகாதாரப் துவாய்கள் (நெப்கின்) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் தயாரிப்பு சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, உற்பத்தியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள், கொண்டு செல்பவர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தேவையான எஸ்.எல்.எஸ்.தர சான்றிதழ் தரநிலைகளுக்கு இணங்காத பட்சத்தில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சுகாதாரப் துவாய்களை உற்பத்தி செய்வதையோ, விநியோகிப்பதையோ, சேமிப்பதையோ அல்லது விற்பனை செய்வதையோ தடை செய்கிறது.
நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், சம்பந்தப்பட்ட இலங்கை தரநிலைகளின் கீழ் உள்ளடக்கப்படும் இறக்குமதி செய்யப்படும் சுகாதார துவாய்கள், உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்னர், இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தினால் நடத்தப்படும் இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.
இந்தத் தேவையானது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சுகாதாரப் பாண்டுகளுக்கான இலங்கை தரநிலை விபரக்குறிப்பு மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மிக மெல்லிய / மெலிதான சுகாதார துவாய்கள் இலங்கை தரநிலை விபரக்குறிப்பு ஆகியவற்றின் கீழ் உள்ளடக்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகளுக்குப் பொருந்தும்.
பொருந்தக்கூடிய தரநிலைகளில் இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தினால் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த உத்தரவு அமையும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space