மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இம்முறை (மார்ச் மாதம்) மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர், தற்போதைய நிலையில் எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றத்தையும் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
உலக சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலைகளின் மாற்றங்களுக்கு அமையவே அடுத்தகட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும்.
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான இறுதி முடிவை அரசாங்கம் வரும் நாட்களில் எடுக்கும் என தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, எரிபொருள் நிலையங்களில் தற்போது நடைமுறையிலுள்ள விலைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலை குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space