ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், தற்போது அந்தக் கப்பல் கனடா வந்தடைந்துள்ளது.
கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்
கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்திலுள்ள ஹாலிஃபாக்ஸ் நகரம் நிறுவப்பட்டதன் நினைவாக, ஒவ்வோராண்டும், ஆகத்து மாதத்தின் முதல் திங்கட்கிழமையில், Natal Day என்னும் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அன்று விடுமுறை தினம் என்பதால் வார இறுதியில் மக்கள் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தில் குவிந்துள்ளார்கள்.
அவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில், பிரான்ஸ், ஸ்பெயின், பெர்முடா, பல அமெரிக்க நகரங்கள் உட்பட 60 நாடுகளைச் சுற்றிவந்துள்ள Gorch Fock என்னும் ஜேர்மன் கப்பல் ஹாலிஃபாக்ஸை வந்தடைய, மக்கள் அந்தக் கப்பலில் ஏறி அதை பார்வையிட்டுவருகிறார்கள்.
81 மீற்றர் நீளமுள்ள அந்த கப்பலில் 18,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் பயிற்சி எடுத்துள்ளார்கள்.
இம்முறை, ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஜேர்மனியின் Kiel நகரிலிருந்து புறப்பட்ட Gorch Fock கப்பல், தற்போது கனடாவை வந்தடைந்துள்ளது.
இது அக்கப்பல் மேற்கொள்ளும் 189ஆவதும், நீளமானதும் ஆன கடற்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் பலவற்றின் கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space