பிரெஞ்சு கப்பல் குழுமத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், தற்போது அந்தக் கப்பலானது உடைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் ஹார்முஸ் நீரிணையில் தொடர்புடைய சரக்கு கப்பலானது ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானது.
San Antonio என்ற அந்த கப்பலில் இருந்த பல ஊழியர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். ஈரான் போரின்போது கட்டுப்பாடுகளை மீறியதற்காக தாக்கப்பட்ட டசின் கணக்கான வணிகக் கப்பல்களில் இந்தக் கப்பலும் ஒன்று.
தொடர்புடையக் கப்பலானது மிகவும் சேதமடைந்திருந்ததால், அதை உடைத்து அப்புறப்படுத்துவதற்காக அனுப்பலாமா என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம் என நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Rodolphe Saade தெரிவித்துள்ளார்.
தெற்கு பிரான்சில் நடந்த வணிக மாநாடு ஒன்றிலேயே அந்தக் கப்பல் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணையில் பல வாரங்களாகச் சிக்கியிருந்த 'சான் அன்டோனியோ' கப்பல், பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேலதிக தகவல்கள் எதையும் அவர் வெளியிட மறுத்துள்ளார். அத்துடன், தங்கள் குழுமம் தற்போதைய சூழலில் வளைகுடாப் பகுதியை நோக்கி மீண்டும் கப்பல்களை அனுப்பும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
CMA CGM-ன் 14 கப்பல்கள்
ஈரான் தரப்பில் இருந்தே அவ்வாறான அறிவுறுத்தல் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடும்பத்தின் பிற உறுப்பினர்களுடன் இணைந்து CMA CGM நிறுவனத்தை முன்னெடுத்து நடத்தும் சாதே,
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீர்வு காணப்படாத விவகாரங்களில் ஒன்றான, அந்த நீரிணையைப் பயன்படுத்துவதற்கான போக்குவரத்து கட்டணங்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மூன்றாவது பெரிய சரக்கு கப்பல் குழுமமான CMA CGM-ன் 14 கப்பல்கள் ஈரான் போரின் போது வளைகுடாப்பகுதியில் சிக்கியிருந்தது. தற்போது அவர்களின் பல கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையில் இருந்து வெளியேறியிருந்தாலும், நான்கு கப்பல்கள் வெளியேற வேண்டும் என்றும் சாதே குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேலின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அங்குள்ள CMA CGM குழுமத்தின் சில கப்பல்கள் வளைகுடாப் பகுதிக்குள் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சாதே தெரிவித்துள்ளார்.
உடைத்து விற்கப்படும்... ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த பிரெஞ்சு கப்பல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space