மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் உடுவில் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கான பிரதேச தொழிற்சந்தை-2026 நிகழ்வு வியாழக்கிழமை (11.06.2026) காலை-09.30 மணி முதல் உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.
மேற்படி நிகழ்வில் தனியார்துறை வேலைவாய்ப்பு, உயர் கல்விக்கான வழிகாட்டல்கள், தொழில்சார் கற்கை நெறிக்கான வழிகாட்டல், சுயதொழில் முயற்சி ஆலோசனைகள் என்பன வழங்கப்படவுள்ளன. எனவே,குறித்த நிகழ்வில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளைத் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
உடுவிலில் பிரதேச தொழிற்சந்தை நிகழ்வு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space