பேரழிவால் பாதிக்கப்பட்ட பாத்தஹேவாஹெட்ட மக்களுக்குக் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட் வேண்டும் என  மத்திய மாகாண  ஆளுநர் நிபுணத்துவ மருத்துவர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்தார்.மத்திய மாகாண ஆளுநர் பாத்தஹேவாஹெட்டபகுதிக்கு மேற்கொண்ட திடீர் விஜயத்தின் போது இதனைத் தெரவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,குழாய்கள்  மூலம் குடிநீர் வழங்குவதற்காக ரூ. 35 மில்லியன் செலவில் புழாய்கள் கொள்முதல் செய்யப்பட்ட போதும் அவை 10 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளமை கவலை தரும் விடயம். அக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாமை குறித்தும், பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் திறனின்மை குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.பாதஹேவாஹெட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பொது வளர்ச்சிப் பணிகளுக்காக அரசாங்கத்தால் பாதஹேவாஹெட்ட பிரதேச சபைக்கு மொத்தம் 718 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்தப் பணத்தினால் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டது.பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் திறனின்மை காரணமாக, அரசாங்கம் வழங்கிய நிதியிலிருந்து எவ்வித பௌதிக வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.