வெளிநாடொன்றில், உக்ரைன் கோடீஸ்வரர் ஒருவர் மீது பார்சல் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்திய தாக்குதல்தாரி, பிரான்சுக்கு தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொனாக்கோ நாட்டில் வாழ்ந்துவரும் உக்ரைன் நாட்டவரான கோடீஸ்வரர் ஒருவர் வீட்டில் மர்ம நபர் ஒருவர் பார்சல் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்.
நேற்றிரவு 9.00 மணியளவில் நிகழ்த்தப்பட்ட அந்த தாக்குதலில் அந்த கோடீஸ்வரர், அவருடைய மனைவி மற்றும் ஒரு 13 வயது பையன் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
50 மற்றும் 60 வயதுகளிலிருக்கும் அந்த தம்பதியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கோடீஸ்வரர் பெயர் Vadym Yermolaiev என, விசாரணை வட்டத்தைச் சார்ந்த, பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் நிகழ்த்திய நபர், மொனாக்கோவில் எல்லையை ஒட்டியுள்ள பிரான்சின் Beausoleil நகருக்கு தப்பியோடும் காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள மொனாக்கோ அதிகாரிகள், அவரைக் கண்டவர்கள் அவரை அடையாளம் காணும் வகையில் தகவலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
உக்ரைன் கோடீஸ்வரர் மீது தாக்குதல்: பிரான்சுக்கு தப்பியோடிய தாக்குதல்தாரி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space