ஈரானில் மூடப்பட்ட பிரெஞ்சு மொழி மையம்!
Ad Space
Ad Space
ஈரானில் அமைந்துள்ள பிரெஞ்சு மொழி மையத்தை மூடியதற்கு பிரான்ஸ் அரசு கண்டனங்களை தெரிவித்துள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரான்ஸ் நாட்டு தூதரகத்துடன் இணைந்து அமைந்துள்ள பிரெஞ்சு மொழி மையத்தை அந்நாட்டு அரசு மூடியதை அடுத்து ஈரானிய தூதரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டதுடன், இதற்கான தகுந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது.பிரெஞ்சு கலாச்சார மையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த புதிய தாக்குதல் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் நியாயமற்றது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பாஸ்கல் கான்பிரவாக்ஸ் கண்டித்துள்ளார்.கடந்த ஜூலை மாதம் தெஹ்ரானில் இரண்டு பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து தற்போது இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிரெஞ்சு மொழி மையமானது ஈரானிய நீதித்துறையின் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது. மேலும் இது மொழி பயிற்சி மையம் என்ற பெயரில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், தூதரக மரபுகளை மீறிய செயல்பட்டதாகவும் ஈரான் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.ஈரான் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் திட்டவட்டமாக மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலைமையானது பிரான்ஸ் - ஈரான் இடையிலான இராஜதந்திர மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரான்ஸ் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space