ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா காமேனி கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ரொய்ட்டரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் ஆரம்பமான காலப்பகுதியில், ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதே தாக்குதலில் அவரது புதல்வரான மொஜ்தபாவும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு போர் ஆரம்பமான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், அப்போதைய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தில் அவரது புதல்வரான மொஜ்தபா கமேனியும் அவருக்கு அருகிலேயே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவரின் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், புதிய தலைவரின் முகம் காயங்கள் காரணமாக விகாரமடைந்துள்ளதாகத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டரஸ் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில், மொஜ்தபாவின் முகம் விகாரமடைந்துள்ளதாகவும், அவரது கால்களில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 56 வயதாகும் மொஜ்தபா, வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு போரை வழிநடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஈரான் பல தசாப்தங்களுக்குப் பின்னர் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு தருணத்தில், புதிய கமேனியின் இந்த ஆரோக்கிய நிலை ஈரானின் எதிர்காலம் குறித்து மேலும் பல கேள்வி
ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமேனி கவலைக்கிடம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space