ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில், பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், பல வீரர்கள் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எர்பில் (Erbil) பிராந்தியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆறு பிரான்ஸ் வீரர்கள் இந்த ஆளில்லா வானூர்தி தாக்குதலில் காயமடைந்ததாக பிரான்ஸ் இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இப்பகுதியில் உள்ள இத்தாலிய தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடும் சர்வதேசக் கூட்டணியின் ஒரு பகுதியாக, எர்பில் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான பிரான்ஸ் வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு , பல வீரர்கள் காயம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space