மத்திய கிழக்கு நாடுகளில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சில நாட்களாக பொதுவெளியில் காணப்படவில்லை என்று தகவல் பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குழந்தைகளைக் கொல்லும் இந்தக் குற்றவாளி (நெதன்யாகு) உயிரோடு இருந்தால், எங்களது முழு பலத்தையும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்வோம்” என கூறப்பட்டுள்ளது.
மார்ச் 12ம் தேதி வெளியான வீடியோ ஒன்றில், நெதன்யாகுவின் ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போலத் தெரிவதைச் சுட்டிக்காட்டியுள்ள பல இணையதளப் பயனர்கள், அது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
அந்த வீடியோவில், 76 வயதான நெதன்யாகு, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய பிறகு தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். அதில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தாபா காமேனியை கொல்லப்போவதாக மறைமுகமாக அச்சுறுத்தியதுடன், இஸ்ரேலிய ராணுவத்தின் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தினார்.
இதனிடையே அமெரிக்க அரசியல் வர்ணனையாளர் கேண்டஸ் ஓவன்ஸ் உட்பட பலரும், ‘பிபி எங்கே?’ (நெதன்யாகுவின் செல்லப்பெயர்) எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே, பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளதுடன், அவர் நலமாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தேடிச் சென்று கொல்வோம்: ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை சபதம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space