கொழும்பின் புறநகர்ப் பகுதியான இராஜகிரிய பிரதேசத்தில் வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் இளைஞன் ஒருவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிகடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் கும்பல் ஒன்று இளைஞன் ஒருவனை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளன.
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான இளைஞன் இது தொடர்பில் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆர்ம்பித்துள்ளனர்.
வெலிகடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞனை கொடூரமாக தாக்கிய கும்பல் ; சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space