மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய ஆண் ஒருவரால் பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியையும் தனது 12 வயது மகளான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளார் என்ற சம்பவத்தை அறிந்த தந்தையர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் புதன்கிழமை (17) இடம் பெற்றுள்ளதையடுத்து பொதுக்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது;
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் உள்ள வீதியில் வசித்துவரும் 54 வயதுடைய ஆண் ஒருவர் அதே வீதியல் உள்ள 12 வயது சிறுமியின் வீட்டுக்கு வழக்கமாக சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த 12 வயதுடைய சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு அந்த நிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றுள்ள நிலையில் சிறுமியும் அவரது நண்பியான பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10 வயது சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர்.
சிறுமியின் பெற்றேர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த நபர் அந்த 12 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் பக்கத்து வீட்டு 10 வயதுடைய சிறுமியின் கைகளை பிடித்து இழுத்ததையடுத்து அவர் அங்ககிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் 12 வயது சிறுமிக்கு நடந்ததை பார்த்த பக்கத்து வீட்டு 10 வயது நண்பியான சிறுமி நண்பியை பாடசாலையில் கேலி செய்து வந்துள்ளார் இந்த கேலி செய்துவந்த சம்பவம் ஆசிரியருக்கு தெரியவந்ததையடுத்து அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரை அழைத்து தெரியப்படுத்தினார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புதன்கிழமை (17) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட திருமணம் முடித்து மனைவியை விவாகரத்து செய்துள்ளதுடன் ஒரு கையும் காலும் இயங்காத 54 வயதுடைய விசேட தேவைடையவ வரை வியாழக்கிழமை (18) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவ பரிசோதணைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதேவேளை பாலிஸ் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான 12 வயது சிறுமியின் தந்தையார் தனது மகளுக்கு நடந்த கொடூரத்தையும் அவமானத்தையும் தாங்க முடியாது சம்பவ தினமான புதன்கிழமை (17) இரவு நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக வியாழக்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேச பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை தற்கொலை செய்து கொண்டவர் ஏற்கனவே ஒரு கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு மாதத்தில் ஒரு நாள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து இட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம் 54 வயதுடையவர் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space