இந்தியாவுடனான எல்லையை ஒட்டிய நேபாளத்தில் பல நாட்களாக நீடித்த மதக் கலவரம் கட்டுக்குள் வந்ததால் அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது.
இந்திய எல்லைக்கு அருகே நேபாளத்தின் கோஷி மாகாணம் சுன்சாரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 26-ம் தேதி 2 சமூகத்தினர் தனித்தனியாக நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
அப்போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது மற்றும் மதக் கொடிகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே மதக் கலவரம் வெடித்து, 3 பேர் உயிரிழந்தனர். கலவரம் பாதித்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக நிலைமை சீரடைந்துள்ளது.
மாதேஷ் மாகாணத்தின் தனுஷா மாவட்டத்தில், பல்வேறு போராட்டக் குழுக்கள் தங்கள் போராட்டத்்தை வாபஸ் பெற்றன. இதையடுத்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. சிராஹா மாவட்டத்தில் உள்ள கோல்சார் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதையடுத்து நேபாளத்தில் இயல்புநிலை திரும்பி உள்ளது.
இந்திய எல்லை அருகே மதக் கலவரம் கட்டுக்குள் வந்தது: நேபாளத்தில் இயல்பு நிலை திரும்பியது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space