ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டு பிரதமர் ஜோர்ஜியா மெலோனி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இத்தாலி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த தீர்மானத்தை வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இத்தாலியப் படைகளை அங்கிருந்து முழுமையாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் மோதல்களில் இத்தாலி ஒருபோதும் ஒரு தரப்பாக இருக்கப் போவதில்லை என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஐரோப்பாவின் முக்கிய நாடான இத்தாலியின் இந்த தீர்மானம் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல் பகுப்பாய்வு
இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அதிரடி அறிவிப்பு: ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space