மத்திய ஆபிரிக்கக் குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக (UNMISS) பணியமர்த்தப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் விமானப் பிரிவின் குழு, மத்திய ஆபிரிக்கக் குடியரசின் ஓபோ பகுதியிலிருந்து, மத்திய ஆபிரிக்க AAKG ஆயுதக் குழுவால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளான பகுதியான Bambouti பம்பௌட்டியில் நிறுவப்பட்ட தற்காலிக செயல்பாட்டுத் தளத்திற்கு (TOB) கடந்த டிசம்பர் 31ஆம் திகதி புதன்கிழமை விமானம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை கொண்டுசென்றது.
இதன்போது ஹெலிகொப்டர் தரை இறங்கும் சந்தர்ப்பத்தில் AAKG ஆயுதக் குழுவிடமிருந்து அந்த பாதுகாப்பு படைத்தளத்துக்கும் ஹெலிகொப்டருக்கும் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக படைத்தளத்தில் இருந்து 14 ஆபிரிக்க இராணுவ வீரர்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து ஓபோ பகுதிக்கு கொண்டுசென்றனர்.
இந்த செயற்பாட்டுக்கு தலைமை விமானியாக விங் கமாண்டர் நூரான் பெரேரா, இணை விமானியாக பிலைட் லெப்டினன்ட் ஷஃப்ரித் இக்பால், விமான பொறியியலாளராக பிலைட் லெப்டினன்ட் பிரவீன் ரத்நாயக்க மற்றும் குழு உறுப்பினர்கள் தீவிரமாக செயற்பட்டனர்.
ஆயுதக் குழுவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 14 ஆபிரிக்க இராணுவத்தினரை பாதுகாப்பாக மீட்ட சிறிலங்கா விமானப்படை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space