அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள ரோவில் பகுதியில் அமைந்துள்ள அவுஸ்திரேலியா - இந்திய சமூக மையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை திருடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் கடந்த திங்கட்கிழமை (2) அதிகாலை சுமார் 12:50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுடெல்லியில் உள்ள இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலால் (ICCR) பரிசாக வழங்கப்பட்ட 426 கிலோ எடையுள்ள இந்த காந்தி சிலை ,அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டது.
முகமூடி அணிந்த மூன்று நபர்கள் ஒரு வெள்ளை நிற வேனில் வந்து கருவி ஒன்றை பயன்படுத்தி காந்தி சிலையை திருடிச் சென்றுள்ளதாக சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை திருட்டு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space