அல்லைப்பிட்டியில் இயங்கிவரும் "தபோவனம்" சிறுவர் ஆற்றல் மையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
விசமிகளால் அல்லது மின் ஒழுக்கால் எரியுண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த "தபோவனத்தின்" பிரதான மண்டபம் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பல பெறுமதி மிக்க நூல்களும் தளபாடங்களும் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியர் தயா சோமசுந்தரம் பிரதேச சிறுவர்களின் நலன் கருதி குறித்த நிறுவனம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் முன்பள்ளி சிறுவர்கள் முதல் தரம் 11 வரையான 90க்கும் அதிகமான மாணவர்கள் கற்றல் விளையாட்டு மற்றும் இதர செயற்பாடுகளை கற்றுவரும் ஒரு நிலையமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிலையம் எரியுண்டதால் கற்கும் மாணவர்களுடன் குறித்த பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அல்லைப்பிட்டி "தபோவனத்தில்" தீ ; பெறுமதிமிக்க நூல்களும் எரிந்து நாசம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space