அனோஜனுக்கான பொது மன்னிப்பை இராஜதந்திர ரீதியில் கோர வேண்டும்!
Ad Space
Ad Space
சவூதி அரசாங்கத்தின் சட்டத்தை மதித்து, அனோஜனுக்கான பொது மன்னிப்பு கோரிக்கையை இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ள வேண்டும். மாறாக அந்த நாட்டுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதன் மூலம் இந்த விடயம் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,எமது நாட்டு பிரஜையான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் சட்டத்துக்கமையவே இடம்பெற்றிருக்கிறது.என்றாலும் அவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளதால், இலங்கையர்களாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையை குறைத்து வழங்குமாறு தெரிவித்து, மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.சவூதி நீதிமன்றம் அந்த நாட்டின் சட்டத்துக்கமையவே இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது என்பதை நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்டு, அதற்காக பொது மன்னிப்பை அந்நாட்டு மன்னரிடம் மிகவும் பணிவுடன் பரிந்துரை செய்யவேண்டி இருக்கிறது. அதனால் இதனை ராஜதந்திர ரீதியில் அரசாங்கம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றே கேட்டுக்கொள்கிறோம்.அதேநேரம் இன்று அனோஜனகுக்கு ஏற்பட்டிருக்கும் நிலை, எதிர்காலத்தில் வேறு யாருக்கும் ஏற்படாமல் இருப்பதற்கு நாங்கள் அது தொடர்பான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஒவ்வொரு சமயம் தொடர்பாகவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாடநெறியை எமது பாடப்புத்தகங்களில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்களுக்கு அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Ad Space
Ad Space