இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள் இணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
கொழும்பில் உள்ள சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு முன்னாள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
“ஹரிணி - நளிந்த கொள்கையை உடனடியாகத் திரும்பப் பெறு...!”, “பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் முறைமையை உருவாக்கு...!” முதலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space