அனுராதபுரம் ருவன்வெலிசாய மஹா சேய விகாரையின் விகாராதிபதியும், வடமத்திய மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கருமான ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க தேரரை, அட்டமஸ்தானாதிபதி பதவிக் கடமைகளைக் கண்காணிப்பதற்காக தற்காலிகமாக நியமிக்க அட்டமஸ்தான குழு தீர்மானித்துள்ளதாக மல்வத்து மஹா விஹாரை இன்று (30) அறிவித்துள்ளது.
பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள, சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, இந்நியமனம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மல்வத்து பீடத்தின் செயலாளர் அதிவணக்கத்துக்குரிய பஹமுனே சுமங்கல நாயக்க தேரரின் கையொப்பத்துடன் இந்த தற்காலிக நியமனம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அட்டமஸ்தானாதிபதி கடமைகளை தற்காலிகமாக கண்காணிக்க ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க தேரர் நியமனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space