அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷெனன் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை (23) மாலை வேளையில் அட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சுற்றவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அட்டன் பகுதியைச் சேர்ந்த 33, 36 மற்றும் 37 வயதுடையவர்கள் ஆவர்.
இந்த சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அட்டனில் சட்டவிரோதமாக இரத்தினக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space