அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (17) மாலை பசுமலை பிரதான நகரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் திஸ்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை இன்று (17) புதன்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரப்பத்தனையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space