நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு !

செவ்வாய் அக்டோபர் 22, 2019

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு - மேல் நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிக்களுக்கு அறிவித்துள்ளது. 

355 இலட்சம் நிதியை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக்கொள்ளல் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் றக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாண்டோ மற்றும் எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

கொழும்பு மேல்நீதிமன்ற நீதியரசர் சஷி மஹேந்திரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான நிஸ்ஸங்க சேனாதிபதி மன்றில் முன்னலையாகாத நிலையிலேயே மேற்கண்டவாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. 

இதேவேளை , மற்றுமொரு வழக்கின் நிமித்தம் நிஸ்ஸங்க சேனாதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக , அவர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதவான்  தெரிவித்தார். இதனடிப்படையில் வழக்கு விசாரணையினை எதிர்வரும் நம்வம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் அன்றைய தினம் நிஸ்ஸங்க சேனாதிபதியை மன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.